நான்காவது நாளாய் போராடும் திருமலை வேலையில்லாப் பட்டதாரிகள்

மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் வட மாகாணத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் இணைந்த திருகோணமலையில் வேலையற்ற பட்டதாரிகளால், நிரந்தர நியமனங்கள் கோரி நான்காவது நாளாகவும் இன்று (06) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 1,500 க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் உள்ளனர். தாங்கள் பட்டம் பெற்று ஐந்து வருடங்களாகியும் நியமனம் கிடைக்கவில்லையெனவும் தமக்கு உடனடியாக நிரந்தர நியமனத்தை பெற்றுத்தருமாறு வேலையில்லாப் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் அரசியல்வாதிகள் தம்மை வைத்து அரசியல் செய்வதாக குறிப்பிட்ட பட்டதாரிகள், அனைவரும் தமது பிரச்சினைகளை கேட்டுக்கொண்டே இருக்கிறார்களே தவிர தீர்வினை யாரும் பெற்றுத்தருவதாக இல்லை என குறிப்பிட்டனர்.

மேலும், பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு எதற்காக போட்டிப் பரீட்சை வைக்க வேண்டும் அவ்வாறு போட்டிப் பரீட்சையின் அடைப்படையில் தெரிவு செய்யும்போது பலர் புறக்கணிக்கப்படுகின்றனர் என பட்டதாரிகள் தெரிவித்ததுடன், தீர்வானது எழுத்து மூலம் கிடைக்கப்பெறும் வரை போராட்டத்தினை கைவிடப்போவதில்லை என போராட்டகாரர்கள் இதன்போது தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435