நான்கு கட்டங்களாக 5,000 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தென் மாகாண கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு நேர்முகத்தேர்வு மற்றும் போட்டிப்பரீட்சையினூடாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளை நான்கு கட்டங்களாக சேவையில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வை. விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2020 டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையான காலப்பகுதியில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நான்கு கட்டங்களாக பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். இணைத்துக்கொள்ளும் முறை குறித்து பத்திரிகை விளம்பரங்களினூடாக தெளிவுபடுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கையை விடவும் ஏதாவதொரு பிரதேசசெயலகத்தில் வெற்றிடங்கள் அதிகமாயிருப்பின் நேர்முகத்தேர்வினூடாக ஆட்சேர்ப்பு நடத்தப்படும். அதேபோல் 10 வெற்றிடங்கள் உள்ள பிரதேச செயலகப்பிரிவில் 11 பேர் விண்ணப்பித்திருப்பின் போட்டிப்பரீட்சை நடாத்தப்படும். அனைத்து விடயங்களுக்கும் ஆட்சேர்ப்பு நடைபெறும். வணிகக்கல்வி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது மிகவும் அவசியம். எனினும் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருக்கின்றமையினால் அவ்விடயத்திற்கு ஆட்சேர்ப்பு நடத்த இயலாது. பொருளாதார ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதிலும் இதே பிரச்சினை நிலவுகிறது என்றும் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.