நாளை தினம் எந்தெந்த சேவைகள் இயங்கும்?

நாளை விடுமுறை தினமாக இருந்த போதிலும் அத்தியாவசிய சேவைகளான மின்சாரம், நீர் விநியோகம் உள்ளிட்ட பொது மக்களுக்கான சேவைகள் இடம்பெறும் என்று அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

அத்தியாவசிய பணிகளுக்காக மாத்திரம் அரச அலுவலகங்களுக்கு வருமாறு அமைச்சர் பொது மக்களிடம் கேட்டுள்ளார். தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கலந்துரையாடி தேவையாயின் மாத்திரம் வரமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

அரச மற்றும் வங்கி விடுமுறை தினமாக நாளை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தும் நீடிக்கவேண்டிய தேவை எற்பட்டால் மாத்திரமே நீடிக்கப்பபடும் என்று அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

தமது அமைச்சில் ஊடகங்கள் மத்தியில் இன்று காலை கருத்து தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு விசேட சுற்றறிக்கை அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரும் எண்ணிக்கையில் பொது மக்கள் கூடும் நிகழ்வுகள், பயிற்சி கூட்டங்கள் முதலானவற்றை தற்காலிகமாக இடை நிறுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அரசாங்க அலுவலகங்களில் அத்தியாவசிய பணியாளர் சபை அதிகாரிகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய அதிகாரிகளை மாத்தரம் அழைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுமாயின் மாத்திரம் அரச அலுவலகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இது குறித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் அரச தகவல் திணைக்களத்தின் அறிவித்தல்கள் கீழே,

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435