நாளை 2 மணிக்குள் பணிக்கு சமூகமளிப்பது கட்டாயம்

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து ஊழியர்களும் நாளை (15) மாலை 2.00 மணிக்கு முதல் சேவைக்கு சமூகமளிக்காத பணியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதியமைச்சர் துறைமும் மற்றும் கடற்றுறை விவகாத பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

பிரச்சினை தொடர்பில் துறைக்கு பொறுப்பான அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இன்று (14) கலந்துரையாடவுள்ளதாக அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில் ஏற்றுக்கொள்ளத் தக்க தீர்வு ஒன்று கிடைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக ஊழியர் சங்கத்தின் தலைவர் ஐ.கே. ஒமேஷ் தெரிவித்தார்.

எனினும் அமைச்சரின் ஊடக பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில் கலந்துரையாடலுக்கான நேரம் ஒதுக்கப்படவில்லையென்றே தெரிவித்துள்ள நிலையில், நேற்று (13) ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் அம்பாந்தோட்டை துறை முக பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாக பிரதியமைச்சர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435