காலவரையின்றி மூடப்பட்டுள்ள நாவின்ன ஆயுர்வேத மருந்துப் பொருள் கூட்டுத்தாபனத்தில் உருவாகியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு காண்பதற்கு குழுவொன்றை நியமிக்க சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தீர்மானித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் நிர்வாக பிரிவின் மேலதிக செயலாளர் பி.ஜி.எஸ் குணதிலக்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் ஆயுர்வேத மருநதுப் பொருள் கூட்டுத்தாபன ஊழியர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் சட்டம் மற்றும் விசாரணை அதிகாரிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் கடமைகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கொண்டமையினால் இந்நிலை தோன்றியுள்ளதாகவும் ஊழியர்கள் தங்களுடைய தேவைக்கேற்ப செயற்பட இடமளிக்க முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாவின்ன ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தாபனத்தில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காலவரையின்றி மூடுமாறு சுகாதார அமைச்சர் உத்தரவிட்டார்.
கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோரை மாற்றுமாறு கோரி அக்கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கூட்டுத்தாபனம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்