
நிதி அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்விடைந்ததை அடுத்து, இன்று நள்ளிரவு முதல் திட்டமிட்டவாறு தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தொடருந்து தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
வேதனப்பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து பணியாளர்கள் போராட்டத்தை மேற்கொள்வதாக அறிவித்திருந்தனர்.
எனினும் நிதி அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதை அடுத்து, இன்று பிற்பகல் 2 மணிவரையில் இந்த போராட்டம் பிற்போடப்பட்டிருந்தது.
எவ்வாறிப்பினும், நிதி அமைச்சருடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காத காரணத்தினால் இன்று நள்ளிரவு முதல் இரண்டு தினங்களுக்கு பணிப்புறக்கணிபபை மேற்கொள்ள உள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.
வேலைத்தளம்