நியமனம் இன்றேல் போராட்டம்: ஒன்றிணைந்த பட்டதாரிகள் எச்சரிக்கை

எமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கான ஒரு தொழிலை அரசாங்கம் வழங்கவேண்டும். இல்லாவிடில்  ஒரு இரு தினங்களில் நாங்கள் போராட்டத்தில் குதிப்போம் என ஒன்றினைந்த பட்டதாரிகள் சங்க தலைவர் தென்நே ஞாணானந்த தேரர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

ஒன்றினைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லா வெளிவாரி  பட்டதாரிகள் நேற்று சனிக்கிழமை (23) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒன்றினைந்து   தமது வேலைவாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடிய பின்னர்  ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுவரை காலமும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்பை வழங்குகின்ற போது உள்வாரி வெளிவாரி, எச்.என்.டி.ஏ என்ற வேறுபாடு இன்றி அனைவரும் பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவினால் அங்கீகாரம் பெற்றவர்கள் என்ற அடிப்படையில் உள்வாங்கப்பட்டு அரச நியமனங்கள் வழங்கப்பட்டன.

ஆனால் இந்த அரசாங்கம் ஒரு போலியான முறையினை கையாண்டு பட்டதாரிகளுக்கிடையே உள்வாரி, வெளிவாரி என்ற வேறுபாடுகளை உருவாக்கி வெளிவாரி பட்டதாரிகளை மீண்டும் வீதிக்கு அழைத்துள்ளனர். இந்த விடயத்தினை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

பிரதமர் அண்மையில் தேர்தல் காலங்களுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதியில் ஜிம் சென்டர்கள் உருவாக்கப்படும் என்ற கருத்தினை தெரிவித்தார். எனவே எமக்கு ஜிம் சென்டர் தேவையில்லை எமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கான ஒரு தொழிலினை இந்த அரசாங்கம் வழங்கவேண்டும். என்பதே எங்களுடைய கோரிக்கை

 

தற்போது பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கி; 14 நாட்களின் பின்னர் எமக்கு நியமனம் வழங்கப்படும் என தமிழ் அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை தந்தனர். ஆனால் இதுவரை காலமும் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இன்று எந்தவிதமாக தீர்வும் இல்லை ஆனால் அரசாங்கம் திகதிகளை தந்து ஏமாற்றி வருகின்றது.

பட்டதாரிகளுக்கு தேவையான ஒழுங்கமைப்பை திட்டமிடப்பட்டு அனைத்து பட்டதாரிகளையும் உள்வாங்கி நியமனங்களை  வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அவ்வாறு தவறும் பட்சத்தில்  தேர்தல் காலம் என்று பாராது நாங்கள் கடுமையான போராட்டத்தை முன்னெடுப்போம் என ஒன்றினைந்த பட்டதாரிகள் சங்க தலைவர் தென்நே ஞாணானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435