பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு!

தேர்தலினால் நிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய, தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) ஜனாதிபதி செயலக உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் வௌியிடப்படவுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனம் கடிதங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (17) திகதி ஆரம்பமாகவுள்ளது.

நியமனம் பெற்றவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி அருகாமையிலுள்ள பிரதேச செயலக காரியாலயத்திற்கு வருகைத் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தகுதி பெற்ற பட்டதாரிகள் தமது பெயர் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியலில் வௌியிடப்படாவிடின் ஜனாதிபதி செயலகத்தில் விசாரிக்கலாம் எனவும் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமாமுடைய ஒரு இலட்சம் பேருக்கு தொழில்வழங்கும் செயற்றிட்டம் அதற்காக ஸ்தாபிக்கப்பட்ட பணிக்குழுவினால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் செயற்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435