நியமனம் கிடைக்காத தொண்டர் ஆசிரியர்களுக்கான அறிவித்தல்

கிழக்கு மாகாண தொண்டராசிரியர் நியமனத்தின் போது பாதிக்கப்பட்ட மிகுதி தொண்டராசிரியர்கள் 2018 ம் ஆண்டு நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியிருந்தும் நியமனம் கிடைக்காதவர்கள் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் இது தொடர்பில் இறுதிப் பட்டியல்கள் அடங்கிய ஆவணங்கள் தயாரிக்கும் பணி இடம் பெறுவதாகவும் கிழக்கு மாகாண தொண்டராசிரியர் சங்கத்தின் தலைவர் தி.ஹரிஸ்ரன் தெரிவித்துள்ளார்.

2008 ம் ஆண்டளவில் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியிருப்பின் அது தொடர்பானதும் ஏனைய மூலப் பிரதிகளையும் பரிசீலனை செய்து கொள்ளுமாறும் எதிர் வரும் 05/08/2019 க்கு முன்பு தலைவரை தொடர்பு கொள்ளுமாறும் பின்வரும் தகைமைகளை பூர்த்தி செய்தோர்களே இவ்வாறு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை தகைமைகளை பூர்த்தி செய்திருத்தல்,2018 நேர் முகப் பரீட்சைக்கு தோற்றியிருத்தல், 2007 க்கு முன் சுற்று நிருபத்துக்கு அமைவாக மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருத்தல் உள்ளிட்ட விடயங்களை கவனத்திற் கொண்டு குறித்த தகவல்களை கவனத்திற் கொள்ளுமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஆவணங்களும் மீள் பரிசீலனை செய்யப்பட்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு இறுதிப் பட்டியல் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435