நியமனம் வழங்கும் நிகழ்வு இடைநிறுத்தம்

இடர் முகாமைத்துவ துறைசார் உத்தியோகத்தர்களுக்கான பதவி நியமனங்கள் வழங்குவது உடனடியாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இடர் முகாதை்துவ பிரதியமைச்சரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான துனேஷ் கங்கந்தவின் உத்தரவுக்கமையவே இந்நியமனங்கள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.

அமைச்சிலுள்ள ஒரு சில அதிகாரிகளின் செயற்பாட்டினால் இந்நியமனங்கள் இடை நிறுத்தப்பட்டதாக நேற்று (06) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் கூறினார்.

அமைச்சில் 30 துறைசார் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கு சுமார் 12000 விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. இதில் 6000 விண்ணப்பங்களை மாத்திரமே பரிசீலித்து அவற்றில் இருந்து 42 பேரை தெரிவு நியமனங்கள் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நியமனங்களில் தௌிவின்மை உணரப்படுகிறது. எனவே மீண்டும் நியாயமான முறையில் தகுதியானவர்களை குறித்த வெற்றிடங்களில் நியமிக்கும் நோக்கில் ஏற்கனவே வழங்கப்படவிருந்த நியமனம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435