நிரந்தர தீர்வின்றேல் தொடர் பணிப்புறக்கணிப்பு- நிறைவேற்று அதிகாரிகள்

தமது பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு கிடைக்கப்பெறாவிட்டால், அடுத்த வாரம்முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக நேற்று (27) கூடிய அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் ஒன்றிணைந்த குழு தீர்மானித்துள்ளது.

சட்டத்துறை அதிகாரிகளுக்கு மாத்திரம் வேதனம் மற்றும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவே அரச நிறைவேற்று அதிகாரிகள் நேற்று ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

நேற்றக் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 8 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டதாக அரச நிறைவேற்று அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை சங்கம், தேசிய இறைவரி தொழிற்சங்க ஒன்றியம், அகில இலங்கை ஆசிரியர் கல்வி சேவை சங்கம் உள்ளிட்ட 15 நிறைவேற்று அதிகாரிகளின் சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அரச நிறைவேற்று அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் நிமல் கருணாசிறி, அரச நிறைவேற்று அதிகாரிகளின் வேதன விடயத்தில் பாரிய பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்றைய அடையாள தொழிற்சங்க நடவடிக்கையின் பின்னர் தமது பிரச்சினைக்களுக்கு வெகுவிரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இல்லாவிட்டால், அடுத்த மாதம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள நேற்றைய தினம் கூடிய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435