நிரந்தர நியமனத்திற்காய் காத்திருக்கும் பலர் – புதியவர்களுக்கு அதிர்ஷ்டம்

போக்குவரத்துத்துறை அமைச்சரினால் தயாரிக்கப்பட்ட ஆவணத்திற்கமைய புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட அலுவலக உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த புகையிரதத் திணைக்கள தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐந்து வருடங்களுக்கும் மேலாக புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களை நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளாதிருக்கும் நிலையில் அண்மையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது எந்தவகையில் நியாயமானது என்று ரணில் திணைக்கள ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் அழைப்பாளர்களில் ஒருவரான எஸ். பி. வித்தானகே கேள்வியெழுப்பியுள்ளார்.

இத்தகைய நிலைமைகளை ஆராயாமலா புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக ஜனாதிபதி பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்டார்? அமைச்சரின் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க இவ்வர்த்தமானி அறிவித்தல் தடையாக உள்ளது. இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல்கள் புகையிரத திணைக்கள ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என்பதை தொழிற்சங்கம் என்றரீதியில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்நிலைமையானது ஜனாதிபதியையும் நாட்டின் சட்டத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் எஸ். பி. வித்தானகே மேலும் தெரிவித்தார்.

 

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435