நிரந்த ஆசிரியர்நியமனம் பெற்ற 412 பேருக்கு சம்பளமில்லை

ஊவா மாகாண சபையினால் நிரந்தர ஆசிரியர் சேவைக்கு இணைத்துகொள்ளப்பட்ட 412 பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு சம்பளம் இதுவரை சம்பளம் வழங்கப்படாதிருக்கின்றமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 2ம் திகதி சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கே இதுவரை சம்பளம் வழங்கப்படாத நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் சேவை சங்கத்தின் உப செயலாளரும், ஊவா மாகாண செயலாளருமான பிரியந்த வருஷமானவின் கையெழுத்துடன் கடந்த 19ம் திகதியிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த மார்ச் மாதம் 2ம் திகதி ஆசிரியர் சேவையில் இணைத்துகொள்ளப்பட்ட 412 பட்டதாரி மற்றும் டிப்ளோமாதாரிகளுடைய நியமனக்கடிதங்களில் குறிப்பிடப்படதற்கமைய இதுவரையில் அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. 20,000 ரூபா கொடுப்பனவு மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்கான சம்பளமும் வழங்கப்படாமல் சம்பள படிவத்தில் இருந்த அவர்களுடைய பெயர்களை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த மாதம் செப்டெம்பர் மாதம் இந்நியமனம் வழங்கலின் முதலாம் கட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டம் தாமதமாகி வழங்கப்பட்டதில் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தவர்களை மென்மேலும் பாதிக்கச் செய்யும் வகையில் சம்பளம் தாமதமாகியுள்ளமை பாரிய பிரச்சினைக்குரிய செயலாகும். மாகாண பொதுச் ​சேவை ஆணைக்குழுவினால் நிரந்தர நியமனம் வழங்கப்படுவதற்கு முன்னர், சம்பள நிதிக்கான அனுமதியை பெற்றிருத்தல் வேண்டும் என்பதால் இவ்வாசிரியர்களுக்கு சம்பளத்திற்கான நிதியின்மை பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.

எனவே இவ்வாசிரியர்களின் சம்பள பிரச்சினை குறித்த கலந்துரையாடுவதற்கு எமது சங்கப் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பை வழங்குமாறு கோருகிறோம். மே மாதம் 27ம் திகதிக்கு பிறகு இவ்விடயம் தொடர்பில் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க எமது சங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த கலந்துரையாடலில் ஊவா மாகாண பிரதான செயலாளர், ஊவா மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர், ஊவா மாகாண கல்வியமைச்சின் செயலாளர், ஊவா மாகாண கல்விப்பணிப்பாளர், ஊவா மாகாண நிதிச்செயலாளர், ஊவா மாகாண கணக்காளர், ஊவா மாகாண கல்வித் திணைக்களச் செயலாளர் ஆகியோரையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435