நிருவாக சேவை அதிகாரிகளின் கொடுப்பனவில் மாற்றம்?

இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் நிருவாக சேவை அதிகாரிகளுக்கு மாதாந்தம் ஆகக்குறைந்தது ஐம்பதாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தேசிய சம்பளங்கள், பதவியணிகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய நிருவாக சேவையில் விசேட தர அதிகாரிகளுக்கு உரித்தான கொடுப்பனவு ஐம்பதாயிரம் ஆகும். முதலாம் தர அதிகாரிகளுக்கான கொடுப்பனவு 45000 ரூபாவாகும். இரண்டாம் தர அதிகாரிகள்குக்கு முப்பதாயிரம் ரூபாவாகும்.

நிருவாக சேவையில் மூன்று வருடங்களுக்கு மேற்பட்ட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த அதிகாரிகளுக்கு 30,000 ரூபாவும் 2- 3 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த அதிகாரிகளுக்கு 15,000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.

இலங்கை நிருவாக சேவை அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதுடன் அச்சேவையில் பயிற்சியாளர்களை உள்ளீர்ப்பதற்கு இக்கொடுப்பனவு அதிகரிப்பு வழங்கப்படுவதாக நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நன்றி – திவயின

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435