
நீண்டகால இடைவெளிக்கு பின்னர், தேயிலை மீள் நடுகை நடவடிக்கைகள் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
அதற்கு ஏற்ற வகையில் இந்த ஆண்டில் நாற்றங்கால் படுகைகள் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் லூசில் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஆயிரம் ஹெக்டேயர் விஸ்தீரணத்தைக் கொண்ட தேயிலை படுகைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக 30 முதல் 40 வருடங்களுக்கு ஒரு முறை தேயிலை மீள் நடுகைகள் இடம்பெறுகின்றன.
அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டத்தின் முதல் கட்டமாக ஒரு ஹெக்டேயர் விஸ்தீரணத்தில் 13 ஆயிரம் புதிய செடிகள் 25 லட்சம் ரூபா செலவில் நாட்டப்படவுள்ளன.
இந்த முறைமையின் கீழ் எதிர்வரும் நான்கரை ஆண்டு காலப்பகுதியினில் ஆயிரம் ஹெக்டயர் விஸ்தீரணத்தில் இந்த பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய தேயிலை செடிகளை நாட்ட தவறும் பட்சத்தில், தேயிலை செடிகளின் எண்ணிக்கை குறைவதுடன், அதன் தரத்திலும் பாரிய வீழ்ச்சி ஏற்படுகின்றது.
அதேவேளை, இந்த வருடம் காலநிலை சாதகமாக அமையும் பட்சத்தில் 31 கொடி கிலோ கிராம் தேயிலையினை உற்பத்தி செய்ய முடியும் எனவும் இலங்கை தேசயிலை சபையின் தலைவர் லூசில் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.