நீதித்துறை அதிகாரிகளின் வேதனம் 2018 ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
இதந்கமைய, நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமாதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகளின் வேதனம் அதிகரிக்கப்பட உள்ளது.
இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவினால் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த பரிந்துரைகளை கவனத்திற் கொண்டு 2018ம் ஆண்டில் நடைமுறைக்கு வரும் வகையில் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமாதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகளின் ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளை திருத்தம் செய்வதற்கும், அத்திருத்தங்களை கவனத்திற் கொண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளின் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் பிரேரிப்பதற்கும் அமைச்சரவை தனது அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது.