நுவரெலியாவில் மாவட்டத்தில் 33 பேருக்கு கொவிட்-19

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 33 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் இமேஸ் பிரதாப சிங்க தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 25 பேருக்கும், மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொத்தணியில் 8 பேக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர்களுடன் தொடர்புடைய ஆயிரத்து 41 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பொது வைத்தியசாலையில் நாள் ஒன்றில் 60 முதல் 90 வரையான பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பவதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் இமேஸ் பிரதாப சிங்க குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு மறு அறிவித்தல் வரையில் நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமாரகோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியா நகரில் அமைந்துள்ள விக்டோரியா பூங்காஇ கிரகரி குளம் மற்றும் சந்ததென்ன உள்ளிட்ட பல சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அந்த மாவட்டத்தின் செயலாளர் ர தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435