நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனை ஊழியர் சங்கம் போராட்டம்

நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனை ஊழியர் சங்கம் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நேற்று (13) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 3 வருடங்களாக எவ்வித சம்பள உயர்வும் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல தடவைகள் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோதிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஊழியர்கள் சார்பில் மருத்துவமனை ஊழியர்கள் சங்கம் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு நிர்வாகத்திடம் கேட்டிருந்தபோதிலும் சரியான பதில் வழங்கப்படவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துளள்னர்.

மேலும், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் திகதி நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனை அரசுடமையாக்கப்பட்டு சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சின் கீழ் இயங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. 2017 ஓகஸ்ட் முதலாம் திகதியிடப்பட்ட அமைச்சரவை ஒப்புதல் பத்திரத்தல் மாதாந்த பராமரிப்புக்காக 200 மில்லியன் ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் 2017 ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ம் திகதி வரை மருத்துவமனைக்கான மருத்துவ தேவைகளை வழங்குவதற்காக திரைசேரி அமைச்சின் மருத்துவ விநியோகப்பிரிவுவுக்கு 50 மில்லியன் ரூபா வழங்கியிருந்தது.

கடந்த மே மாதம் 30ம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்பாக சாட்சி வழங்கிய சுகாதார அமைச்சின் செயலாளர் வஸந்த பெரேரா நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனை சட்டரீதியாக அரச நிருவாகத்தின் கீழ் கொண்டு வரப்படவில்லை என்றும் ஆனால் அரச நிதியினுடாக இயங்கி வருவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தொழில் பாதுகாப்பு, பதவியுயர்வு, சம்பளஉயர்வு, சீருடை மற்றும் அலுவலக போக்குவரத்து சேவை உட்பட 9 கோரிக்கைகளை முன்வைத்து இவ்வார்ப்பாட்டம் மேறகொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435