நேர்முகத் தேர்வில் சித்தி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் நியமனம்

வட மாகாண கல்வியமைச்சின் கீழுள்ள பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் 321 பட்டதாரிகள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர் என்று கல்வியமைச்சின் செயலாளர் இ. இரவீந்ரன் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 25ம் 26ம் திகதிகளில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வுக்கு 352 பட்டதாரிகள் அழைக்கப்பட்ட போதிலும் 321 பேர் மட்டும் கலந்துகொண்டுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாண கல்வியமைச்சின் கீழியங்கும் பாடசாலைகளில் 418 கணித, விஞ்ஞான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றமை கண்டறியப்பட்டது. அவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு மத்திய அமைச்சின் அனுமதி கிடைத்ததையடுத்து கடந்த பெப்பரவரி மாதம் ஒரு மாத காலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இக்காலப்பகுதியில் 284 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்திருந்தன. எனினும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆளணி பற்றாக்குறை நிலவியமையினால் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி நீட்டிக்கப்பட்டது. அதற்கமைய கடந்த ஏப்ரல் வரையில் விண்ணப்பங்களை அனுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியில் மேலும் 68 விண்ணப்பங்கள் கிடைத்தன. அப்போதும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆளனி போதாமையினால் போட்டிப்பரீட்சையின்றி நேரடியாக நேர்முகத்தேர்வுக்கு விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டனர். அவர்களிலும் பலர் நேர்முகத்தேர்வுக்கு சமூகமளிக்கவில்லை.

நேர்முகத்தேர்வுக்கு சமூகமளித்தவர்களில் ஒரு சிலரை தவிர ஏனைய அனைவரும் தகுதியுடையவர்களாக காணப்படுகிறபோதிலும் சிலருடைய பட்டங்களில் உள்ள சில தன்மையின் காரணமாக 15 பேர் வரை வாய்ப்பினை இழக்கக்கூடும். ஏனையவர்களின் நியமனங்கள் ஜூன் மாதம் முதல் வாரம் வழங்க முயற்சிக்கிறோம். மேலும் நேர்முகத்தேர்வை தவறவிட்டவர்களுக்கு மேலும் ஒரு திகதியில் சந்தர்ப்பத்தை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435