கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் நேற்றைய (21) தினம் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் இதுவரையில் கொவிட்-19 நோயினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 02 பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுக்குள்ளானமையுடன் நிமோனியா நிலை மற்றும் தொற்று அதிர்ச்சிக்குள்ளானமை என்பன அவரின் மரணத்திற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். அதியுயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோயுடன் கொவிட் 19 தொற்றுக்குள்ளானமை அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நிமோனியா நிலைமையே அவரின் மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட மாரடைப்பு அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். நீரிழிவு, அதியுயர் இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட மாரடைப்பு அவரின் மரணத்திற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
கொவிட் 19 உடன் ஏற்பட்ட மாரடைப்பே அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நிமோனியாவுடன் பக்டீரியா தொற்று நிலைமை ஏற்பட்டமை அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட கடுமையான நிமோனியா நோய் நிலைமை அவரின் மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
76 வயதான பெண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் நிமோனியா மற்றும் இரத்தம் நஞ்சானமை அவரின் மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.