பக்மிகொல்ல தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தனியார்துறைக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்காக இதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட கொடுப்பனவுகளை நிறுத்தி அரசாங்கம் அதிகரித்த கொடுப்பனவை மட்டும் வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பாகமுவ, பக்மிகொல்ல தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் உட்பட 80 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இக்கொடுப்பனவினால் தமது சம்பளம் ஒரு ரூபாவினாலும் அதிகரிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள இவ்வூழியர்கள், மே மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.

இவ்வநீதிக்கு எதிராக நாம் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளோம். அதனூடாக நீதி கிடைக்காத பட்சத்தில் தொழிற்சாலைக்கு முன்பாக உண்ணாவிரதம் இருப்போம் என்று இதன் போது அவ்வூழியர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் தொழிற்சாலையின் முகாமையாளர் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் 2500 அதிகரிக்க முன்பே நாம் அவர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்து வழங்கினோம். அரசினால் கொடுப்பனவு அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டால் நாம் வழங்கிய கொடுப்பனவை நிறுத்துவோம் என்று முன்னறிவித்தல் செய்திருந்தோம் என்றார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435