பட்டதாரிகளின் நியமன வயது 45 ஆக அதிகரிக்க கிழக்கில் தீர்மானம்

கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளின் நியமனங்களுக்கான வயதை 45 ஆக அதிகரிப்பதற்கான பிரேரணை நேற்று (25) கிழக்கு மாகாணச்சபையில் நிறைவேற்றப்பட்டது.

நேற்று தவிசாளர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போது முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண அமைச்சர் இரா. துரைசிங்கம் ஆகியோர் சமர்ப்பித்த குறித்த அவசர பிரேரணையே நிறைவேற்றப்பட்டது.

குறித்த பிரேரணையை விவாதங்களின்றி ஏகமனதாக நிறைவேற்றுவதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய விவாதத்திற்கு இடமில்லை என்று தவிசாளர் குறிப்பிட்டார்.

பட்டதாரிகளின் நியமன வயதை அதிகரிக்க 35 வயதிலிருந்த 40 வயதாக அதிகரிக்க மாகாண ஆளுநரிடமிருந்து அனுமதி கிடைத்துள்ளதாக முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435