ஐம்பதாயிரம் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளவர்களுக்கான நியமனக்கடிதங்கள் அரச நிருவாக மற்றும் உள்விவகார அமைச்சின் செயலாளருடைய மேற்பார்வையில் மாவட்ட செயலாளர்களினால் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பதாரிகளினால் அனுப்பப்பட்ட விண்ணப்ப தரவுகள் ஜனாதிபதி செயலகத்தினால் கணனிமயப்படுத்தும் நடவடிக்கைள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
ஒரு வருட பயிற்சியின் பின்னர் நியமனம் பெற்றவர்களின் விருப்பத்திற்கமைய, கிராமிய பிரதேசங்கள், மத்திய அரசு மற்றும் மாகாணசபைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு உள்ளீர்க்கப்படுவார்கள்.
ஐம்பதாயிரம் தொழிலற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அண்மையில் அனுமதி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.