பட்டதாரி ஆசிரியர் நியமன விண்ணப்பங்கள் 1500 நிராகரிப்பு

வட மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்காக விண்ணப்பித்த 1500 ற்கும் மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பட்டதாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

வடமேல் மாகாண அரச சேவை ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று (26) காட்சிப்படுத்தப்பட்ட பெயர் பட்டியலை பார்வையிட்டதையடுத்தே பட்டதாரிகள் இவ்வாறு அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

தெளிவான காரணங்கள் சுட்டிக்காட்டப்படாமல் தமது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வடமேல் மாகாண பட்டதாரிகள் விளக்கமளிக்கவும் முன்வரவில்லையென்று கூறியுள்ளனர்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த தமக்கு அதிகாரிகளின் செயற்பாடு கவலை தருவதாகவும் பட்டதாரிகள் கூறியுள்ளனர்.

 

நியுஸ் பர்ஸ்ட்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435