கனியவள தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில், எரிபொருள் சேவையை அத்தியாவசிய சேவையாக கருதும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனியவள தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று முன்தினம் (24) நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.
இதன் நாடுமுழுவதுமுள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் பணிகள் தடைபட்டன. இதனாலர், சாரதிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.
அத்துடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு பொதுமக்களுக்கும் அசௌகரியம் ஏற்பட்டது.
இந்த நிலையில், எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று (26) நள்ளிரவு வெளியிடப்பட்டது.
அத்துடன், இன்று (26) காலை முதல் எரிபொருள் விநியோக பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள கனியவள ஊழியர்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை அரசாங்கம் விடுத்துள்ளது.
பணிப்புறக்க்கணிப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவரும் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு விடுத்துள்ளது.
சேவைக்கு திரும்பாத பணியாளர்கள் சேவையிலிருந்து விலகியதாக கருதப்படுவார்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.