தென் மாகாண நெடுந்தூர சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சேவையாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை கைவிடுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
சேவையாளர்கள் தமது பணிநிறுத்தத்தை கைவிட்டு சேவைக்கு திரும்புமாறும் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி ஹேமசந்ர தென்மாகாண நெடுந்தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து பணியாளர்களிம் கோரியுள்ளார்.
போராட்டம் கைவிடப்படாவிட்டால், சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள அனுமதி பத்திரம் ரத்துச் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குருந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகள் நிறுத்தும் தரிப்பிடங்களில் நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு நிறுத்த அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நேற்று ஆரம்பமானது.
இந்த நிலையில், இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்காத சலக பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரத்தை ரத்துச் செய்யப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் எம். ஏ. பீ ஹேமசந்ர தெரிவித்தார்.