ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்ட ஆலோசனைக்கு அமைய பணிப்புறக்கணிப்பில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ரயில் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சேவையாளர்களின் உரிமைகளை நிறைவேற்றாது தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியமைக்கு எதிராக தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ரயில் தொழிற்சங்கங்கள் கொழும்பில் ஒன்றுக் கூடலை நடத்தி தீர்மானிக்க உள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.