கொரோனாவும் பணியில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அச்சுறுத்தலும்

பணியில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான சர்வதேச தினம் இன்றாகும்.

“தொற்றுநோயை கட்டுப்படுத்துங்கள்: பணியில் பாதுகாப்பும் சுகாதாரமும் உயிர்களை பாதுகாக்கும்” என்ற தலைப்பில் சர்வதேச சுகாதர அமைப்பு இன்றைய செய்தியை வெளியிட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றினால் உலகளவில் சுமார் 25 மில்லியன் தொழில்கள இழக்கப்படலாம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு அண்மையில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் தொழில்துறை பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாகும். கொவிட்-19 உலக பரவலினால் தொழிலாளர்கள், பணியில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்  மோசமான நிலையை அடைந்துள்ளது

இந்தப் பின்னணியில், கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட அரசாங்கங்கள், தொழில்தருநர்கள், தொழிலாளர்கள் மற்றும் முழு சமூகங்களும் உலகளவில் எதிர்கொள்ளும் பெரும் சவாலை உணர்ந்து, பணியில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான சர்வதேச தினம், பணியில் தொற்று நோய்கள் பரவல் தொடர்பில் கவனம் செலுத்துவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு குறிபிட்டுள்ளது.

அரசாங்கங்கள், தொழில்தருநர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்கள் கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், பணியில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கவும் முயற்சிக்கும்போது பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன.

உடனடி நெருக்கடிக்கு அப்பால், பரிமாற்றத்தை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தைத் தக்கவைக்கும் வகையில் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பிப்பது பற்றிய கவலைகள் உள்ளன.

பணியிடங்களில் பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்தும், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார சேவைகள் வகிக்கும் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்த தினத்தை பயன்படுத்துகிறது.

மீட்பு மற்றும் எதிர்கால தயாரிப்பு உள்ளிட்ட நடுத்தர முதல் நீண்ட காலத்திற்கு இது கவனம் செலுத்தும், குறிப்பாக, தேசிய மற்றும் நிறுவன மட்டங்களில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் Occupational safety and health (OSH) மேலாண்மை அமைப்புகள் மற்றும் கொள்கைகளில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் குறித்தும கவனம் செலுத்துகிறது.

 

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கை ரைடரின், பணியில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான சர்வதேச தின செய்தி,

“ஒவ்வொரு நாளும் எங்களுக்காக தங்களது ஆரோக்கியத்தை பணயம் வைக்கும் மில்லியன் கணக்கான சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்களைப் பாதுகாக்க எங்களுக்கு சிறப்பு நடவடிக்கைகள் தேவை.

“தொலைபேசிவழி பணியாற்றும் முறைமை தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவதற்கான புதிய வாய்ப்புகளை வழங்குகிறது . இருப்பினும், தொழிலாளர்கள் இந்த ஏற்பாடுகளுக்கு கலந்துரையாடல்களை நடத்த முடியும். இதனால் அவர்கள், குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது வயதானவர்களைப் பராமரித்தல் போன்ற பிற பொறுப்புகளுடன் சமநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.” – என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தல் என்பது தொழிலாளர் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தலாகும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துளாளது.

ஜூன் 2019 இல், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நூற்றாண்டு மாநாட்டில், வன்முறை மற்றும் துன்புறுத்தல் மாநாடு (No.190) மற்றும் அதனுடன் கூடிய பரிந்துரை (No.206) ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடைசெய்து தடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

தற்போதைய நிலையில் கொவிட்-19 தொற்றினால் உலகம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. உலகளாவிய ரீதியில் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்னர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 11 ஆயிரத்து கடந்துள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 இலட்சத்தை கடந்துள்ளது.  9 இலட்சத்து 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர். எனினும், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

தொற்றுநோயை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பும் உலகின் பல்வேறு நாடுகளும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், பணியில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொழிலாளர்களின் உயிர்களை பாதுகாக்கும் என்பது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வலியுறுத்தலாக உள்ளது.

இன்றைய நாளுக்கான பிரசாரத்தையும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு முன்னெடுக்கிறது.

வகை : பிரசாரம்
நாள் : 28 ஏப்ரல்
இடம் : சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையகம் – ஜெனிவா
தொடர்புகளுக்கு : Manal Azzi ([email protected]); SafeDay Team ([email protected])

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435