பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத திணைக்கள ஊழியர்கள் சங்கம் இன்று (08) மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்த போராட்டம் நாளை (09) நன்பகல் 12 மணி பிற்போடப்பட்டுள்ளது.
சம்பள பிரச்சினைகளை தீர்த்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் திணைக்களத்தின் கட்டளை வழங்குநர்கள், சாரதிகள், புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளிடம் பொறுப்பதிகாரிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று பிரதி போக்குவரத்து அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
எவ்வாறு இருப்பினும் நாளை கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் உரிய அமைச்சரவை பத்திரம் அனுமதிக்கப்படும் வரை வேலை நிறுத்தம் நாளை பிற்பகல் வரை பிற்போடப்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.