சம்பள உயர்வுக்காய் போராடும் பல்கலை. கல்விசாரா ஊழியர்கள்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (07) முன்னெடுக்கவுள்ள அடையாள வேலைநிறுத்தத்தில் 24 தொழிற்சங்களைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர் என்று

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழிங்சங்க சம்மேளனத்தின் இணைத் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே ‘வேலைத்தளம்’ இணையதளத்திடம் தெரிவித்தார்.

சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் அரசாங்கத்துடன் பேச்சுவார்ததை நடத்தினோம். இந்தப் பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய, 2017 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்தது. எனினும் இதுவரை நடைமுறைக்கு வராத நிலையில் இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த சம்பள உயர்வுக்காக 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் 460 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் ஆகியுள்ளபோதும், இன்னும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.

சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றரிக்கையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட வேண்டும். ஆனால், சுற்றரிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.

எனவே, கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னிலையில் இன்று நண்பகல் 12 மணிக்கு எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது என அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்க சம்மேளனத்தின் இணைத் தலைவர் எமது இணையதளத்திடம் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435