தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்ச்சியாக மீறப்பட்டு வந்தமையினால் வடக்கு இளைஞர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டதும் அவர்களை பயங்கரவாதிகள் என்று பெயரிட்ட அரசாங்கம், அவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 1979ம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (தற்காலிகமாக) நிறைவேற்றிக்கொண்டதும் அனைவரும் அறிந்த விடயமே. தமிழ் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான சட்டம் என்று அரசாங்கம் தௌிவுபடுத்தியமையினால் தெற்கு மக்கள் பெரிதான எதிர்ப்பை இச்சட்டத்திற்குக் காட்டவில்லை
ஆனால் அந்த சட்டத்தினூடாக முதன் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் தெற்கில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட நடிகரும் முன்னாள் ஜனாதிபதியின் சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் கணவரும் அரசியல்வாதியுமான விஜயகுமாரனதுங்க மற்றும் அரசியல்வாதி பீலிக்ஸ் பெரேரா போன்றோர் ஆவர். அரசாங்கம் அன்று தெரிவித்தது போன்று இந்தச் சட்டம், தமிழ் தீவிரவாதத்திற்கு எதிராக மட்டுமே அமுல்படுத்தப்பட்ட சட்டம் அல்ல என்பதை புரிந்துகொள்வதற்கு தெற்கு மக்களுக்கு இதைவிடவும் புதிதாக உதாரணங்கள் தேவையில்லை.
தற்காலிகமாக நிறைவேற்றப்பட்ட “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்” 1982, 10ம் இலக்க மற்றும் 1988 22ம் இலக்க மாற்றங்களுடன் நிரந்தர சட்டமாக மாற்றப்பட்டது.
அன்றிலிருந்து அந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கடுமையான சட்டமாக இயங்க ஆரம்பித்தது. அத்தோடு அதற்கு எதிராக மக்கள் எதிர்ப்பும் ஆரம்பமானது. கடந்த அரசாங்கத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிரான மக்கள் குரல் உயர்ந்து காணப்பட்டது. மக்கள் எதிர்ப்பு அதிகரித்ததையடுத்து, குறித்த சட்டத்தை ரத்து செய்யுமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்தது. இந்நிலையில், 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ரத்து செய்வதுடன் அதற்குப் பதிலாக மிகப் பொருத்தமான, நியாயமான சட்டத்தை கொண்டு வருவதாக உறுதியளித்தது. அதற்கமைய, ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ என்ற பெயரில் புதிய சட்டமூலமொன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதனை நிறைவேற்றுவதற்கும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் அந்தச் சட்டம் மிகப் பயங்கரமானது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட தொழிற்சங்கங்கள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் என்பன கருத்து வௌியிட்டுள்ளனர்.
அச்சட்டத்திற்கமைய பயங்கரவாதம் என்பது
எந்தவொரு விடயம் தொடர்பில் மக்களை அச்சமடையும் நோக்கில் செயற்படுபவர், இலங்கை அரசாங்கம், வேறு அரசாங்கம் அல்லது சர்வதேச அமைப்புக்களின் ஏதாவது ஒரு செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர் மற்றும் அவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அல்லது தடுப்பதற்கு மக்களை தூண்டிவிடுபவர் இச்சட்டத்திற்கு அமைய ‘பயங்கரவாத செயல்’ என வரையறை செய்யப்பட்டுள்ளது.
அத்தியவசிய சேவை செயற்பாட்டுக்கு தொந்திரவு விளைவித்தல்
அத்தியவசிய சேவை அல்லது விநியோகத்தில் தொடர்பில் அடிப்படை வசதிகள் அல்லது போக்குவரத்து வசதிகளுக்கு தொந்திரவு விளைவித்தல் அல்லது அத்ததைகய செயற்பாடுகளில் ஈடுபடல், சமிக்ஞை பரிமாறல் மற்றும் ஏனைய இலத்திரனியல், அனலொக், டிஜிட்டல் மற்றும் ஏனைய அதிர்வெண் அடிப்படையிலான ஒலிபரப்பு அமைப்பு போன்ற கேபிளுடன் கூடிய அல்லது கேபிளற்ற பரிமாற்றங்களுக்கு தடையாக செயற்படுபவர்கள் பயங்கரவாதிகளாக கருதப்பட்டு கைது செய்யவும் தண்டனை வழங்கவும் இப்புதிய சட்டத்தினால் முடியும்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவர் 14 நாட்களுக்கு தடுப்புக்காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு வழங்குதல், தற்போதுள்ள சிறைச்சாலைகளுக்கு மேலதிகமாக தடுப்பு மத்திய நிலையங்களை பெயரிடுவதற்கான நிதியொதுக்கீடும் இச்சட்டத்தில் உள்ளது. மேலும், பெண் சந்தேக நபர் ஒருவரை விசாரணைக்காக கைது செய்யும் போது பெண் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் இருக்கவேண்டியது அவசியமில்லை, எந்தவொரு அமைப்பையும் தடை செய்யும், செயற்பாட்டை நிறுத்தும் அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சருக்குள்ளது. இதைதவிர தற்போது இயங்கும் சாதாரண சட்டத்தின் கீழ், குறிப்பிடப்பட்டுள்ள சில குற்றங்கள் புதிய சட்டத்தில் ‘பயங்கரவாத செயற்பாடுகளாக’ அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இப்புதிய சட்ட நிறைவேற்றத்திற்கு அனைத்து பக்கங்களில் இருந்தும் எதிர்ப்பு வலுத்துள்ளதுடன் இச்சட்ட மூலத்தை உடனடியாக நிறைவேற்றி நடைமுறைப்படுத்துவது எதிர்வரும் தேர்தல் காலத்தில் இலகுவான செயல் அல்ல. எனினும் எதிர்காலத்திலாவது இதனை நிறைவேற்றிக்கொள்வதற்கு இவ்வரசாங்கத்தின் பொருளாதார மற்றும் அரசியல் மூலோபாயம் அழுத்தம் செலுத்துகிறது.
எதிர்காலத்தில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டின் திறந்த பொருளாதாரத்துடன் 2011 ஏப்ரல்- மே மாதங்களில் ஏனைய அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில் முயற்சித்தது போன்றே ஊழியர் சேமலாப நிதியத்தில் கோடிக்கணக்கான பணத்தை நிதி வியாபாரிகளின் லாபத்திற்காக அதிகரிப்பதற்காக பங்குச்சந்தையில் முதலீடு செய்தவற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுவதுடன் முன்மொழிவுகளுடன் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்காக கடந்த அரசாங்கத்தைப் போன்றே ஓய்வூதியத்தின் நன்மை குறித்து வர்ணித்து வருகின்றனர்.
இந்நடவடிக்கையை மேற்கொள்வதற்கு வர்த்தகர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் இப்போதே தயாராகி வருகிறது. அதற்காக தொழிலாளர் சட்டங்கள் ஒவ்வொன்றையும் தனியான சட்டமாக இணைத்து ரகசியமாக பல்வேறு தரப்பினர்களின் விருப்பத்தை பெற முயற்சித்து வருகிறது. அதன் முதற்கட்டம் தொழில் பாதுகாப்பை இல்லாதொழித்தலுக்கு பதிலாக தொழிலில் நிபந்தனைகளை தீர்மானிப்பதற்கான முழு அதிகாரத்தையும் முதலாளிகளுக்கு வழங்குவதாகும்.
தற்போதுள்ள நல்லாட்சியிலோ அல்லது அடுத்த ஆட்சியிலோ பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இவ்வாறான பலவந்தமான பயணம் செல்வதற்கே பயன்படுத்தப்படும். இனி வரும் அரசாங்கமும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தவிர்ப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இல்லாதொழிக்க அழுத்தம் செலுத்தும் பொறுப்பும் மற்றும் அவசியமும் எமக்குள்ளது. அதற்காக அனைத்து பணியிடங்களிலும் தொழிலாளர் குழுக்களை அமைத்து, அவற்றை மாகாண குழுக்களாக நிலைநிறுத்துவதுடன் தனியார் துறையில் பணியாற்றும் 80 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களின் சுதந்திரத்தையும் உரிமையைும் பாதுகாப்பதற்காக தேசிய தொழிலாளர் மாநாடொன்றை நடத்த நாம் தயாராவோம்.
சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது ஊழியர் சங்கம் ஆகியவற்றினூடாக தொழில் செய்யும் மக்களுக்கு விநியோகிப்பதற்கு தயாரிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் இருந்த பெறப்பட்ட தகவல்கள்
நன்றி- வெடபிம
வேலைத்தளம்