பரீட்சை மத்திய நிலைய சுகாதார பாதுகாப்பு நிதியை விரைவாக வழங்குக!

பரீட்சை மத்திய நிலைய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்குவது என தீர்மானிக்கப்பட்ட 15,000 ரூபா நிதியை உடனடியாக செயற்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் பரீட்சை மத்திய நிலையங்களின் சுகாதார பாதகாப்புக்காக பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு 1000 ரூபா மட்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையான எதிர்ப்பை வௌியிட்டதுடன் போதியளவு வசதிகளை வழங்குமாறும் வலியுறுத்தியது. க.பொ.உயர்தர பரீட்சை நடைபெறும் மத்திய நிலையங்களுக்கு தேவையான சுகாதார பாதுகாப்புக்கு அவசியமான பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு ஒரு மத்திய நிலையத்திற்கு 15,000 ரூபா பணத்தை பாடசாலையின் அபிவிருத்தி சங்க கணக்கினூடாக வழங்க கல்வியமைச்சு நேற்றைய தினம் (21) தீர்மானித்திருந்து. எனினும் அது எந்தவகையில் நடைமுறை சாத்தியமற்ற செயல் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் உரிய அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியது.

பாடசாலை அபிவிருத்தி சபையின் கணக்கில் இருந்து பணத்தை பெறுவதற்கு பாடசாலை அதிபர், பொருளாளராக செயற்படும் ஆசிரியர் அல்லது ஆசிரியை காசோலையில் கையொப்பமிட வேண்டும். அவர்களில் ஒருவராவது பரீட்சை கடமைகளை பொறுப்பேற்றிருந்தால் கையெழுத்திட பாடசாலைக்கு வருகைத் தருவது சாத்தியமற்றது. அதேபோல், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேச பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் தமது பாடசாலைக்கு வருகைத் தருவது பாதுகாப்பற்ற செயலாகும்.

மேலும் பாடசாலை அபிவிருத்தி சங்க கணக்கினூடாக பொருட்கள் கொள்வனவு செய்யும் போது கொள்வனவு சட்டத்திற்கமைய கொள்வனவு செய்ய வேண்டும். அதற்கமைய பரீட்சை மத்திய நிலையங்களில் சுகாதார பாதுகாப்புப் பொருட்களை கொள்வனவு செய்ய குறித்த சட்டதிட்டத்திற்கமைய நீண்டகாலம் எடுக்கும்.

இந்நிலைமையை எடுத்துக்காட்டிய பின்னர் அப்பணத்தை உடனடியாக வலக கல்விப் பணிப்பாளர்களினூடாக பரீட்சை மத்திய நிலையங்கள் மற்றும் பரீட்சை ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. அத்தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தி பரீட்சை மத்தியநிலைய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435