பல்கலைகழக விரிவுரையாளர் சங்கமும் போராட்டத்தில் குதிக்க தயார்

தமது கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் இரு வாரங்களில் பதிலளிக்கப்படாவிடின் கடும் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அரச அதிகாரிகளின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் அனுப்பியுள்ள சுற்றுநிரூபத்தை பல்கலைக்கழகத்திலும் செயற்படுத்துதல், ஏனைய அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிப்பத்திர வரிவிலக்கு பல்கலைகழக விரிவுரையாளர்களுக்கும் செல்லுபடியாக்கப்படல், விரிவுரையாளர்களை சங்கடப்படுத்தும் வகையில் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தை ரத்து செய்தல், கல்வி சீர்த்திருத்தங்களின் போது பல்கலைக்கழக விரிவுரையாளர்களை இணைத்துக்கொள்ளல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே விரிவுரையாளர் சங்கம் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மேற்கூறப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் பலதடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ரங்கிக்க ஹல்வத்துர, தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் ஆராய சங்கம் அடுத்த வாரம் கூடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வேலைத்தளம்- மூலம்- திவயின

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435