பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர் போராட்டத்தில்

அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (10) தொடக்கம் மீண்டும் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

2015ம் ஆண்டு வரவுசெலவு திட்டத்திற்கமைய வழங்கப்பட்ட கொடுப்பனவு 10,000 ரூபா கொடுப்பனவு அரச ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டபோதிலும் மேலும் 15 வீத ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் குறித்த கொடுப்பனவு இணைக்கப்படவில்லை என்று இதனை உடனடியாக நீக்கவேண்டும் என்பது உட்பட 2016ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய, வீட்டுக்கடன் வழங்கல், நிதித்தொகையினை அதிகரித்தல், ஆட்சேர்ப்பு முறையில் சேவையாளர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளல், 2013ம் ஆண்டு நிறுத்தப்பட்ட வேறு மொழி தேர்ச்சிக்கான வழங்கப்பட்ட கொடுப்பனவை மீண்டும் வழங்கல், ஊழியர்கள் நிர்வாக சேவைக்கு பதவியுயர்வு பெறுவதற்கு போடப்பட்டுள்ள தடையை நீக்கல், 876 சுற்றுநிரூபத்திற்கமைய போட்டிப்பரீட்சையினூடாக ஆட்சேர்ப்பு செய்தல், பல்கலைக்கழக ஊழியர்களின் பிள்ளைகளை விரும்பிய பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு சேர்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குதல், பரீட்சை கொடுப்பனவு, போக்குவரத்து கொடுப்பனவு, உத்தியோகப்பூர்வ உடைக்கான கொடுப்பனவு போன்றவற்றை அதிகரித்தல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இத்தொடர் வேலைநிறுத்தப்போராட்டம் தொடர்பில் அங்கத்தவர்களை தௌிவுபடுத்தல், ஆணையையும் பெறலுக்கான தொழிற்சங்க பிரதிநிதிகளின் சந்திப்பு நேற்று (09) பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமது தேவைகளை பெற்றுக்கொள்வதற்கான தொடர் போராட்டத்தை முன்னெடுப்பது என்று தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தீர்மானித்தனர்.

மூலம் – தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435