பல்கலை. கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (25) அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

இன்று மேற்கொள்ளப்படும் அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் பெப்ரவரி மாதம் முழுவதும் வேலைநிறுத்தப்போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அச்சங்கம் எச்சரித்துள்ளது.

ஏற்கனவே கடந்த 17ம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஒரு மணிநேர போராட்டத்திற்கு உரிய தீர்வு கிட்டாமையினாலேயே இன்று முழுநாள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாதாந்த இழப்பீட்டுப்படி 20 வீதம் அதிகரிக்கப்படவேண்டிய சுற்றுநிருபம் வௌியிடப்படாமை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மொழித்திறன் கொடுப்பனவு உடன்பாட்டின்படி வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமை, கல்விசார் விரிவுரையாளர்களுக்கு சமமான கடன்தொகை வழங்கப்படல், உடன்பாட்டின்படி காப்புறுதி மற்றும் திறன்மிக்க ஓய்வூதியத் திட்டத்தினை உருவாக்குவதற்கான செயல்திட்டமொன்றினை மேற்கொள்ளாமை, 2006 முதல் ஆட்சேர்ப்பு விதிமுறைகள் சீர்செய்யாமை, உயர்நிலை பதவி உத்தியோகத்தர் வெற்றிடங்களை உரிய முறையில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமை, உதவி பதிவாளர், உதவி நிதியாளர், உள்ளக கணக்காய்வாளர் நியமனங்களில் உள்ளக ஊழியர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இல்லாதொழிக்கப்பட்டமை ஆகிய காரணங்களை சுட்டிக்காட்டியே இப்போராட்டம் நடத்தப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435