சாதாரணதர பரீட்சையில் சித்தியடையத் தவறும் மாணவர்களுக்கான தொழில் ரீதியான கற்கைகள் கற்பிப்பதற்காக 15 ஆயிரம் புதிய ஆசியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள ப்படவுள்ளனர் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில மாதங்களில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்காக புதிதாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய தேவை உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
அத்துடன், ஆசிரியர் குறைப்பாடுகளை நிவர்த்திசெய்யும் நோக்கிலும் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.