பாடசாலை 2ம் தவணை ஆரம்பம் பிற்போடப்பட்டது: பல்கலை குறித்து முடிவில்லை

பாடசாலை இரண்டாம் தவணை மே மாதம் 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் பாடசாலை இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 20, திங்கள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் பரவுவதுடன் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நடைபெறாத காலப்பகுதியில் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தொலை்கல்வி வசதிகளை முடியுமானளவு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும் திகதி தற்போதைய நிலைமைகளை மீளாய்வு செய்து பல்கலைக்கழக அதிகாரிகளினதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்குமாறு உயர் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435