வெளிநாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு

வெளிநாட்டில் சேவையில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த மற்றும் அங்கவினமுற்றவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கடந்த 18ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நட்டஈடு வழங்கும் நிகழ்வில் சுமார் 51 மில்லியன் பெறுமதியான காசோலைகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டது.

கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் பாதிக்கப்பட்ட வெளிநாட்டில் வேலை செய்தோரின் குடும்பங்களுக்கு சுமார் 200 மில்லியன் ரூபா வரை நட்டஈடு வழங்க தம்மால் முடியும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சுடன் இணைந்து வெளிநாட்டில் பணியாற்றுவோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வெளிவிவகார அமைச்சு என்றும் பின்நிற்கப்போவதில்லை என்று இதன்போது அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

மேலும் தன் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

சிங்கப்பூர், லெபனான், ஜோர்தான், மலேசியா, கட்டார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் சேவை செய்யும் போது இறந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கே இந்நட்டஈடு வழங்கப்பட்டது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435