பாதி சம்பளம் வழங்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அப்புத்தளை கஹாகல்ல தோட்ட தொழிலாளர்களின் கடந்த மாதத்திற்கான சம்பள தொகையில் பாதிக்கும் பாதியான தொகை குறைக்கப்பட்டதனை கண்டித்து தோட்ட மக்கள் நேற்றுமுன்தினம் (8) காலை வேலைக்கு செல்லாமல் ஊர்வலமாக அப்புத்தளை தொழிற்காரியாலயத்திற்கு சென்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்­தினர்.

வேலை செய்த நாட்களில் ஒருநாள் விட்டு ஒரு நாளாக அரைநாள் வீதம் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் சம்பளத் தொகை வழங்கப்படவுள்ளதை கண்டித்து பல மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தினை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு அப்புத்தளை பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் தொழிற்சங்க பிரதிநிதியுமான சிற்றரசு மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளான உமா சந்திரன் நமசிவாயம் (ம.ம.மு) ஆகியோர் தொழிற்காரியாலய ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்து பிற்பகல் 2 மணியளவில் உரிய தீர்வினை பெற்று தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து பிரதிநிதிகள் மற்றும் பொலிஸாரின் தலையீட்டினால் ஆர்ப்பாட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.

எந்த காரணத்திற்காக தோட்ட நிர்வாகம் மேற்படி அரை நாள் வீதம் முழுநாள் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் வழங்க தீர்மானித்தது. சம்பந்தமான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்ட னர்.

வேலைத்தளம்/ வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435