பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ள மட்டு. செங்கல் தொழிலாளர்

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட யானை கட்டியவெளி பிரதேசத்தில் செங்கல் தொழிலாளர்களின் பல இலட்சம் பெறுமதியான கற்கள் உடமைகள் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதற்கான நட்டஈடுகளை உரிய அதிகாரிகளினூடாக பெற்றுத்தருமாறு  பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கேட்டுள்ளனர்.


இது தொடர்பில் கவனம் செலுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிநேசன் நட்ட ஈட்டினைப் பெற்றுத்தரு வதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்; கடந்த சில தினங்களுக்கு முன்பாக  14 மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தும் அவர்களின் வாழ்வாதார தொழில்களும் பாதிப்படைந்துள்ளன.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளாந்தம் சுயதொழிலில் ஈடுபடுகின்ற பல தொழிலாளர்களின் தொழில்களும் பாதிப்படைந்துள்ளது. அதாவது யானைகட்டிவெளி மற்றும் பள்ளவட்டை போன்ற பிரதேசங்களில் செங்கற்கள் அறுக்கும் தொழிலில் ஈடுபட்ட பல தொழிலாளர்களின் தயார் படுத்தப்பட்டிருந்த 6 இலட்சத்திற்கு மேற்பட்ட பெறுமதிவாய்ந்த கற்கள் மழை நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருப்பது வேதனையளிக்கின்றது. இவர்கள் இந்த தொழிலை மேற்கொள்வதற்காக  அவர்கள் தங்களின் தங்க ஆபரணங்களை அடகு வைத்து  முதலீடு செய்துள்ளனர. இந்நிலையில் இந்த தொழிலை இழந்திருக்கின்றனர்.

இதற்கான நிவாரணத்தை உரிய அமைச்சினூடாக பாதிக்கப்பட்ட தொழிலாழிகளுக்கு உடன் வழங்க நடவடிக்கை எடுக்கவேண் டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நான் தொடர்பு கொண்டு இந்த இயற்கை அனர்த்தங்களில் தங்களின் ஜீவனோபாய தொழில்களை இழந்தவர்களுக்கு நிவார ணங்களையும் இழப்பீட்டு தொகைகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435