பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆறுமாத பயிற்சி நெறி

வடமத்திய மாகாண தமிழ் மொழி மூல பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆறுமாத கற்கைநெறியொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாகாண முன்பள்ளி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வட மத்திய மாகாணத்தில் உள்ள பாலர் பாடசாலைகளில் பணியாற்றும் க.பொ. உயர்தரம் சித்தியடையாத ஆசிரியர்களுக்காக இப்பயிற்சி நெறி நடத்தப்படுவதாக இச்சான்றிதழ் கற்கை நெறி நடத்தப்படுவதாக அதிகாரசபையின் உதவிப்பணிப்பாளர் எஸ்.ஏ.எம். சஹாப்தீன் தெரிவித்துள்ளார்.

இதற்கான செலவீனங்களை அதிகாரசபையே ஏற்றுக்கொள்ளும் என்பதுடன், இப்பயிற்சிநெறிக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வு நேற்று (20) நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயிற்சிநெறிகள் மிஹிந்தலை முஸ்லிம் வித்தியாலத்தில் நடைபெறவுள்ளதாக மாகாண தமிழ் மொழி பாடநெறி இணைப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435