குறைந்த வசதிகளுடைய பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளை உயர்தரப்பரீட்சைக்கு தோற்றுவதில் உள்ள பிரச்சினை தொடர்பாக ஆராய நியமிக்கபட்ட குழு சுயாதீனமாக இயங்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவில் கல்வியமைச்சில் அதிகாரிகளே உள்ளனர் என்றும் அதனால் குறித்த பிரச்சினை தொடர்பில் சுயாதீனமாக அவர்கள் இயங்குவதில் பிரச்சினை காணப்படுகிறது என்றும் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலைத்தளம்