பிரதமரின் பதிலுக்காக காத்திருக்கிறோம் – ஆறுமுகம் தொண்டமான்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாளையதினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை வெற்றியளிக்காவிட்டால் நாங்கள் தொழிற்சங்க ரீதியில் பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்று நுவரரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்த வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் எம்மை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது நாளை தொழில் அமைச்சர் உ டன் கலந்துரையாடி சுமூகமான பதில்லொன்றை கூறுவதாக பிரதமர் தெரிவித்தார்.

நாளைய பேச்சு வெற்றியளிக்காவிடின் நாங்கள் தொழிற்சங்க ரீதியில் பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆயிரம் அடிப்படை வேதனம் வழங்கப்பட வேண்டும் என்ற தங்களது தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என ஆறுமுகம் தொண்டமான் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435