பிரதமருடனான பேச்சுவார்த்தையின் பின் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து!

பல்வேறு போராட்டங்களுக்கிடையில் மீண்டும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது என்று தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வருடத்துக்கு 300 நாள் வேலை வழங்குவது என்ற பிரதான உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை மாற்றம் செய்வது என்பதில் முதலாளிமார் சம்மேளனம் இன்னும் உறுதியாக உள்ள நிலையில் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் இன்னும் சுமூக நிலை ஏற்படவில்லை என்று தெரிக்கப்படுகிறது.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடான பேச்சுவார்த்தையின் பின்னர் எதிர்வரும் 18ஆம் திகதி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது என்ற இணக்கப்பாடு நேற்று (14) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ளது.

இப்பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, நவீன் திஸாநாயக்க மற்றும் பிரதான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435