துறைமுக தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது

பிரதமருடன் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று (02) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் கொழும்பு துறைமுக தொழிற்சங்கள் முன்னெடுத்திருந்து சத்தியகிரக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

வீரகெட்டியவில் அமைந்துள்ள தங்காலை – கால்டன் இல்லத்தில் இன்று (02) இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு விற்க வேண்டாம் எனவும், அதன் நடவடிக்கைகளை துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ் கொண்டுவருவமாறும் கோரி, துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

பிரதமருடன் இன்று முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்தை சாதக தன்மையில் நிறைவடைந்துள்ளதாக துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதையடுத்து போராட்டத்தைக் கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435