மே தினத்தன்று பிரான்ஸ்ஸின் இடம்பெற்ற ஊர்வலத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் அந்நாட்டு ஜனாதிபதியின் பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரங்களில் ஈடுபட்டனர்.
இதன்போது பொதுச்சொத்துக்கள் தாக்கப்பட்டதுடன் குப்பை கூடைகளுக்கு நெருப்பு வைத்தும் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இக்கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 380 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். தொழிற்சங்கங்களுடன் தொடர்புபட்ட தொழிலாளர்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் 7400 பொலிஸாரை பயன்படுத்தியுள்ளனர்.
இதன்போது பொலிஸாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலும் மோதல்கள் இடம்பெற்றன. தொழிற்சங்க உறுப்பினர்களும் 14 பொலிஸாரும் காயமடைந்தனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிலர் முகமூடி அணிந்திருந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
நன்றி- திவயின
வேலைத்தளம்