பிற தொற்று நோய்களும் பரவாமல் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கம் கோரியுள்ளது.
கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த அசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளபொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹானா, பிற தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதிலும் இதே ஆர்வம் காட்டப்பட்டால், குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட முடியும், குறிப்பிட்டுள்ளார்
டெங்கு மற்றும் எலி காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 18,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் எலி காய்ச்சல் 100 நபர்களின் உயிரைக் காவுகொண்டுள்ளது. நாம் போதுமான கவனம் செலுத்தாவிட்டால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். இப்போதே உள்ளூராட்சி சபைகளில் குப்பைகளை சேகரிப்பதில் சிக்கல் உள்ளது இது டெங்கு நுளம்பு அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்- திவயின