புதிதாக நியமனம்பெற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

புதிதாக நியமனங்களை பெற்ற பட்டதாரிகள் உடனடியாக சேவைக்கு சமூகமளிக்காவிடின் அவர்களின் நியமனம் இரத்துச் செய்யப்படும் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் அரச சேவைக்கு 4100க்கும் அதிகமானோர் நியமனம் பெற்றனர்.

எனினும், அவர்களில் பெருமளவானோர் இதுவரை சேவைக்கு சமூகமளிக்கவில்லை என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதிதாக நியமனங்களை பெற்ற பட்டதாரிகள் உடனடியாக சேவைக்கு சமூகமளிக்காவிடின் அவர்களின் நியமனம் இரத்துச் செய்யப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435