புத்தாண்டு விடுமுறையில் UAE போக்குவரத்து துறையில் மாற்றம்

இன்றும் (31) நாளையும் (01) வழங்கப்பட்டுள்ள புத்தாண்டு விடுமுறைத் தினங்களில் வர்த்தக நேரத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய வீதி மற்றும் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

நுகர்வோர் மகிழ்ச்சி நிலையங்கள், கட்டணம் செலுத்தவேண்டிய வான நிறுத்தங்கள், பொது போக்குவரத்து பஸ்கள், துபாய் மெட்ரோ ரயில்கள், கடல் போக்குவரத்து முறைகள், சாரதி பயிற்சிப் பாடசாலைகள் மற்றும் வாகன பரிசோதனை நிலையங்கள் என்பவற்றில் இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலவச வாகன நிறுத்தம்

கட்டணம் செலுத்தப்பட்டு வாகனம் நிறுத்தப்படும் அனைத்து வாகன நிறுத்தங்களும் இவ்விரு நாட்களுக்கு இலவசமாக செயற்படும் (பல் தர வாகன நிறுத்தங்களுக்கு இவ்விதி முறை செல்லுபடியாகாது) செவ்வாய்க்கிழமை (02) திகதி தொடக்கம் மீண்டும் வழமைக்குத் திரும்பும்.
Free parking

டுபாய் மெட்ரோ

டிசம்பர் 31ம் திகதி ரெட் லைன் மெட்ரோ ரயில் நிலையம் காலை 5.00 மணி தொடக்கம் 2018 ஜனவரி இரண்டாம் திகதி (2) வரை இயங்கும். கிறீன் லைன் மெட்ரோ ரயில் நிலையம் டிசம்பர் 31ம் திகதி காலை 5.30 மணி தொடக்கம் 2018 ஜனவரி இரண்டாம் திகதி நள்ளிரவு வரை இயங்கும்.

ரயில் பஸ்கள்

டிசம்பர் 31ம் திகதி காலை 6.00 மணி தொடக்கம் 2018 ஜனவரி இரண்டாம் திகதி அதிகாலை 1.00 மணிவரை இயங்கும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435