புனர்வாழ்வு பெற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய கொள்கை, பொருளாதார விவகார அமைச்சினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, யுத்தம் நிறைவடைந்த பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த 20 பேருக்கு அரச நியமனங்கள் வழங்கப்படவுள்ளது